'ஒமிக்ரோனால் ஆபத்தில்லை' - நாடும் முடங்காது! இப்படி கூறுகின்றார் சுகாதார அமைச்சர் (காணொளி)
Corona
Christmas
People
Keheliya Rambukwella
SriLanka
Omicron
By Chanakyan
கொரோனாவின் திரிபான ஒமிக்ரோன் (Omicron) தொற்றினால் நாட்டு மக்களுக்கு எவ்விதமான ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களில் நாட்டை முடக்கும் தீர்மானம் எவையும் இது வரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை தற்பொது அச்சுறுத்தி வரும் நிலையில் இலங்கையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது பெரும் ஆபத்தை ஏற்படுதும் நாட்டை முடக்குங்கள் இல்லையேல் பண்டிகைக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி