காணாமல் போனோர் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நிறைவு: வெளியான தகவல்
வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது.
அத்தோடு, வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 16,700 என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர்
குறித்த விடயத்தை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் வழக்கறிஞர் மகேஷ் கட்டுலந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 10,000 வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு திட்டம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
