மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்த தமிழன்(காணொளி)
ரி 20 உலக கிண்ண தகுதிகாண் சுற்று போட்டி
ரி 20 உலக கிண்ண தகுதிகாண் சுற்று போட்டியில் இன்றையதினம் இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம்பிடித்துள்ள தமிழர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து இலங்கை அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை சாய்த்து ஹட்ரிக் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சாதனைக்கு சொந்தக்காரரான தமிழன்
சென்னையை சேர்ந்த தமிழரான சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் என்ற தமிழரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
இன்றைய போட்டியின் 15 ஆவது ஓவரில் இந்த சாதனை படைக்கப்பட்டது.முதலாவதாக பானுக ராஜபக்ச, அடுத்து சரித்த அசலங்க,பின்னர் டசுன் சானக ஆகியோரே அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டவர்களாவர்.
History - First hattrick in the T20 World Cup 2022. pic.twitter.com/AoLcKagK1i
— Johns. (@CricCrazyJohns) October 18, 2022
இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.