பட்டதாரி ஆசிரியரின் கொடூர செயல்! ஒன்றரை மாத சிசு கோடரியால் தாக்கி கொலை
Police
Murder
SriLanka
Anurathapura
Infant
By Chanakyan
ஒரு மாதமும் 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றை அவரது தாயார் கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அநுராதபுரம் - கிரவஸ்திபுர பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்த சந்தேகநபரான தாய் பின்னர் கல்னேவ காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
30 வயதுடைய பட்டதாரி ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.