பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் பெட்ரோலுடன் ஒருவர் கைது
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
National Fuel Pass
By Kiruththikan
புத்தளம் பகுதியில் ஒயில் கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 லீட்டர் டீசல் மற்றும் 25 லீட்டர் பெட்ரோலுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பபண்ணி கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது புத்தளம் காவல்துறையினருடன் இனைந்து ஒயில் கடையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் பெட்ரோல் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
