நூதனமாக பதுக்கி வைக்கப்பட்ட டீசல் சிக்கியது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் 1914 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை காவல்துறை பிரிவில் ஹம்பாந்தோட்டை திவார துறைமுக வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்ணீர் தாங்கியில் பதுக்கல்
இந்த டீசல் இருப்பு அதிக விலைக்கு விற்கும் என்ற எதிர்பார்ப்பில் 2 பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை முர்ரே வீதியில் வசிக்கும் 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி