மட்டக்களப்பில் குழாய் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Batticaloa
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Harrish
            
            
                
                
            
        
    மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி காவல்துறை பிரிவில் வீதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் வீதியால் வந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதன்போது, காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்