தனிப்பட்ட தகராறு - ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை!
Srilanka
death
Mount Lavinia
Personal dispute
sharp weapon
By MKkamshan
கல்கிசை இரத்மலானை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) இரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இவ்வாறு கொலைச் சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்