மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் துயரம்
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கராயன் குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அக்கராயன்குளம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன் குளம் வைத்தியசாலை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதேயிடத்தைச சேர்ந்த பேரம்பலநாதன் கேசவன் (வயது-27) என்ற குடும்பஸ்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அவரை உடனடியாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் போதே அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.