திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி
முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026) இன்று பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி பயணித்த மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
கார்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகிழுந்து காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக முல்லைத்தீவு மாங்குளம்காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 மணி நேரம் முன்