யாழில் பாரிய விபத்து - சம்பவ இடத்திலையே இருவர் உயிரிழப்பு..! (படங்கள்)
Jaffna
Death
By Kiruththikan
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை


சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி