கனடா மீது ட்ரம்ப் பாய்ச்சல் : மோசமான நாடுகளில் ஒன்று என விமர்சிப்பு
மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா (canada)என அமெரிக்க(us) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டியில், நான் ஒவ்வொரு நாட்டுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு வைத்துள்ளேன். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர்கள் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இருக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு கனடாவின் பொருட்கள் தேவை இல்லை.
மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று
அவர்களின் ஆற்றல் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு எதுவும் தேவையில்லை. கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும். எனக்கு கவலையில்லை. உண்மையில், கனடாவின் லிபரல் கட்சியின் ஆட்சியை சமாளிப்பது எளிது என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
கனடா பிரதமராக பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி
இந்த மாத தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு, லிபரல் கட்சி தலைவர் போட்டியில் மார்க் கார்னி வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் ட்ரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை 'ஆளுநர் ட்ரூடோ' என பலமுறை ட்ரம்ப் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்