உலகின் தேனிலவு கொண்டாட சிறந்த இடங்கள்...! இலங்கைக்கு கிடைத்த இடங்கள்
2026 ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றுள்ளது.
உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடம் மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான 'ட்ரிப் அட்வைசர்' (TripAdvisor) வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட:டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அதற்கமைய, உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடம் காலி நகருக்குக் கிடைத்துள்ளது.

அந்த அறிக்கையில் 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |