சட்டவிரோத மருந்து பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது !
சட்டவிரோதமான முறையில் மற்றும் முறையான அனுமதியின்றி சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது (11) இடம்பெற்றுள்ளது.
கைதான குறித்த நபர், இந்தியாவின் (India) பெங்களூருவிலிருந்து (Bengaluru) சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு செந்தமான யு.எல். 174 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையம்
இந்தநிலையில், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இவர் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விமானம் மூலம் பல்வேறு மருந்துகளை கடத்தி நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்துக்கடைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவ்வாறு சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் மருந்துப் பொருட்களை இவர் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த மருந்துகளில், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட மருந்து பொருட்களின் பெருமதி சுமார் 25 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் பத்மினி குமாரிஹாமியின் அறிவுறுத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |