பேலியகொடையில் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை : மூவர் கைது
நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் பேலியகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் நேற்று (18) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீகஹவத்த பகுதியில் வசிக்கும் 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பில் தெரியவருவதாவது, பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறாக்கள் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்டவர் வத்தளை - ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இந்த தகராறில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரனும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |