காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி சூடு - பதில் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Kiruththikan
ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் உள்ள கடையொன்றின் உரிமையாளரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான "கரவிட்ட சியா" என்ற புனைப்பெயர் கொண்ட நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டவேளை சந்தேகநபர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பதில் துப்பாக்கிச் சூடு
குறித்த துப்பாக்கி பிரயோகத்தின் போது மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டில், பலத்த காயமடைந்த சந்தேக நபர் அவிஸ்ஸாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்