வடக்கை தாக்கிய டிட்வா புயலால் தொடரும் பாதிப்பு

Sri Lanka Northern Province of Sri Lanka Cyclone
By Dharu Nov 29, 2025 11:09 AM GMT
Report

வடக்கின் தற்போதைய நிலை 

பேசாலை

  • மன்னார் பேசாலை கிராம கரையோரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு காணப்படும் காட்சிகள் 

களத்தில் சாள்ஸ் நிர்மலநாதன்

  • இயற்கை அனர்த்தத்தினல் பாதிக்கப்பட் மக்களுக்கு உடனடி தேவைகளை களத்திற்கு சென்று வழங்கி வருகின்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ். நிர்மலநாதன் அந்த வகையில் வசந்தநகர் மற்றும் பாவளப்பட்டான் கிராமங்களுக்கு இன்று சென்றிருந்தார்.

முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதி

  • முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் கண்டாவளை தொடக்கம் புளியம்பொக்கணை சந்தி வரையான பகுதி அண்ணளவாக 1'6" உயரத்திற்கு வெள்ள நீர் ஆபத்தாக பாய்வதால் மறு அறிவித்தல் வரை தடை #போக்குவரத்திற்குதடை செய்யப்பட்டுள்ளது.

ரி.என்.சூரியராஜா அறிக்கை  

  • நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288  குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா  தெரிவித்துள்ளார். 
  • குறிப்பாக சண்டிலிப்பாய் - 412 பேர், சங்கானைப்  5 521 பேர், ஊர்க்காவல்துறை  760பேர், யாழ்ப்பாணம் 699பேர், வேலனை1035 பேர், சாவகச்சேரி  1085 பேர், கோப்பாய் 802பேர், காரைநகர் 212 பேர், பருத்தித்துறை  1621 பேர், மருதங்கேணி 185 பேர், 2042 பேர், நெடுந்தீவு, 3526 பேர், உடுவில், 192 பேர், கரவெட்டி 23 பேர், நல்லூர்  1104 பேர்.

மாந்தை மேற்கு,

  • மன்னார் மாந்தை மேற்கு, பள்ளமடு வைத்திய சாலை முற்றாக நீரில் மூழ்கியள்ளது.
  • விடத்தல் தீவு சந்தியி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
  • மன்னார் மாந்தை மேற்கு, கள்ளியடி வரலாறு காணாத வெள்ளம்.

யாழ். குருநகர் 

  • சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு யாழ். குருநகர் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பார்வையிட்டார். 

கிளிநொச்சி கண்டாவளை

  • கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இம் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் களத்திலிருந்து செய்து வருகின்றார்.

நல்லூர் 

  • யாழ்ப்பாணம் நல்லூரிலும்,  நல்லூர் வீரமாகாளியம்மன் கோவில் அடியில் ஒரு வீட்டினுள் முழுமையான வெள்ளம் புகுந்துள்ளது.
  • குறித்த பிரதேசத்துக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டம்

  • சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 2397 குடும்பங்களைச் சேர்ந்த 7513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
  • குறித்த சீரற்ற காலநிலையால் ஒரு உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர்.
  • அத்தோடு 2 வீடு முழுமையாகவும் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரணைமடு

  • இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இருப்பினும், பெருக்கெடுத்து ஓடும் கால்வாயின் வெள்ளத் தடுப்பணை உடைந்ததால், அந்தப் பகுதியில் அதிக ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு

  • முல்லைத்தீவு பரந்தன் வீதியூடாக பயணம் கண்டாவளைப்பகுதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இரண்டு பாலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் முல்லைத்தீவு நோக்கி பயணிக்க முடியாது எனவும் கடமையிலிருந்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனையிறவு 

  • A9 ஆனையிறவு உப்பளத்தை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலை 9.30 நிலவரப்படி, இரணைமடு உபரி நீர் வரத்து அதிகரித்தால் நீர் மட்டம் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளர். மேலும், சிறிய வாகனங்கள் உந்துருளிகளை தவிர்த்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
  • நேற்று நள்ளிரவு முதல் முல்லைத்தீவு மாவட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக தடைப்படுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரங்களும் செயலற்று போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் 

  • வட்டுவாகல் பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் A35 வீதி வட்டுவாகல் பாலத்துடன் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு

  • புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் பாதையும் முற்றாக தடைப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர உதவிகளை பெறமுடியாது முல்லைத்தீவு மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் - யாழ்ப்பாணம் 

  • மன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை.

மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம்

  • நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
  • அதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

முருங்கன் பிரதான வீதி

  • அகத்திமுறிப்பு,முருங்கன் பிரதான வீதி. பொற்கேணி,வேப்பங்குளம் நீரில் மூல்கியது.

இரணைமடு குளம்

  • இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குளத்தை அண்டிய கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் செயலாளர் பிரிவுகளிலுள்ள ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியான், பனங்கண்டி, தட்டுவான்கொட்டி மற்றும் கனகராயன் ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் நிலைமையை கவனத்தில்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

வட்டக்கச்சி கிளிநொச்சி

  • வட்டக்கச்சி கிளிநொச்சி பாதை மூடப்பட்டது.
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026