பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி கைது : காவல் நிலையம் விரைந்த சோனியா காந்தி!
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கைதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு விரைந்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என பிரதமர் இல்லம் முன்பு காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய தலைவர்கள் கைது
தொடர்ந்து பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைவர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையறிந்த சோனியா காந்தி, மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அடைக்கப்பட்ட பிரியங்கா காந்தியை சென்று பார்த்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்