சட்ட கட்டமைப்புக்கள் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் சிரமத்திற்குள்ளாகும் மக்கள்
தற்போது இணையவழி முறைமை ஊடாக உடனடியாக நிதி வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி முறைமைகள் ஊடாக கடன்களை பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணையவழி நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி, நேற்று(01) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர்.
சட்ட கட்டமைப்பு
அவ்வகையில், சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி ஊடாக அதிக வட்டி வீதத்தின் கீழ் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இணையவழி நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அவ்வாறான நிறுவனங்களில் உடனடியாக கடன்களை பெற்றுக்கொண்ட சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில், காவல்துறையிடம் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.