இணையவழி பாதுகாப்பு திருத்த சட்டம் தொடர்பில் வெளியான தகவல்
Parliament of Sri Lanka
Tiran Alles
Sri Lanka
By Shalini Balachandran
இணையவழி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா அரசாங்க அச்சகத் துறையால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், திருத்தப்பட்ட ஆன்லைன் இணையவழி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், முன்மொழியப்பட்ட இந்த சட்டம் குறித்து இலங்கையில் பல்வேறு தரப்பினரால் முக்கிய கவலைகள் எழுப்பப்பட்டன.
கருத்து வேறுபாடுகள்
இதில் இணையத்தில் கருத்து வேறுபாடுகள் மீது கூறப்படும் ஒடுக்குமுறையும் அடங்கும் நிலையில், பல்வேறு துறைகளுடனான கலந்துரையாடலை அடுத்து இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tran Alas) தெரிவித்துள்ளார்.
மேலும், திருத்தப்பட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி