யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் முறைகேடு...!: நோயாளர்கள் கடும் விசனம்

Jaffna Sri Lanka Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Aug 02, 2024 03:07 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (jaffna) - வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் நோயாளர்களுக்கு தேவையான எந்தவிதமான உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பிற்பகல் ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த உணவுச்சாலையில் ஆறு மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர் நேற்றிரவு 6:45 மணியளவில் சுடுதண்ணீர் பெறுவதற்கு சென்றுள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான்

இஸ்ரேலுக்கு அமெரிக்காவுக்கு மரணம் மக்கள் கோஷம்: ஹமாஸ் தலைவர் மரணத்திற்கு பழி தீர்க்குமா ஈரான்

மருத்துவமனை உணவுச்சாலை

அவ்வாறு சென்றவர்களிடம் இங்கு 6:00 மணியுடன் சுடுநீர் நிறுத்தப்பட்டுள்ளது, அவ்வாறு உங்களுக்கு சுடுநீர் அவசியமெனில் ரூபா 100 தாருங்கள் மின்சார கேற்றிலில் சுடுநீர் வைத்து தருகின்றேன் என உணவுச்சாலை நடத்துனர் கோரியுள்ளார்.

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் முறைகேடு...!: நோயாளர்கள் கடும் விசனம் | Allegation Made Against Jaffna Hospital

இந்தநிலையில், ரூபா 100 கேட்கப்பட்டதால் சுடுநீர் பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ள நிலையில் இதனால் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு உதவியாக நிற்பவர்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

சுடுநீர் பெற சென்றவர்களுடன் உரையாடிய மருத்துவமனை உணவுச்சாலை முகாமையாளர் தம்மிடம் ரூபா 140000 மாதாந்த குத்தகை பெறுவதால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டித் தீர்க்க போகும் இடியுடன் கூடிய மழை

கொட்டித் தீர்க்க போகும் இடியுடன் கூடிய மழை

குடிநீர் வழங்கல்

அத்தோடு, உணவுச்சாலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய உணவுகளாக கொத்துரொட்டி, பிட்டு கொத்து, பறோட்டா, ரொட்டி, சம்பா அரிசி, சோறு மற்றும் வெள்லலை அரிசி சோறு போன்றவை நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்கள் மட்டுமே அங்கே விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சிற்றுண்டிகளாக மஸ்கற், பூந்தி மற்றும் லட்டு போன்றனவே அதிகளவில் விற்பனை செய்யடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பான குடிநீரானது யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் தொகுதி உரிய பராமரிப்பின்மையால் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவுச்சாலையில் முறைகேடு...!: நோயாளர்கள் கடும் விசனம் | Allegation Made Against Jaffna Hospital

இதனால் நோயாளர்கள் ஒரு லீட்டர் குடிநீரை ரூபா 80 பெறுமதியிலேயே பெற்றுக் கொள்வதாகவும் மருத்துவ மனையில் பணியாற்றுபவர்கள் விடுதியில் தங்கியுள்ளவர்கள் உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே சென்று பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் மருத்துவமனையில் ஆறாம் விடுதியில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளர்கள் பலமணி நேரமாக கட்டில் இன்றி கதிரைகளில் அமர்திருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அண்மை நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம்: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024