தமிழர் ஒரு போதும் நாட்டின் அதிபராக முடியாது: சிறீதரன் விசனம்
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் என்ன நிறுத்தாவிட்டால் என்ன சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் சிறிலங்கா (Sri Lanka) அதிபராக முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர் ஒரு காலமும் நாட்டின் அதிபராக வரமுடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர் “நாங்கள் கொள்கைகளை வைத்து வேட்பாளரை நிறுத்தலாம், ஆனால் இது தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்தும் ஆலோசனைகளை பெற்றும் முடிவுகளை எடுப்போம். மாவட்டக் கிளைகளுடன் ஆலோசனைகளை நடத்தி ஆராய்ந்து அந்த முடிவுகளை எடுக்கலாம்.
கட்சி நிலவரங்கள் மற்றும் மக்களுடைய பொருளாதார நெருக்கடிகள், அதிபர் தேர்தல் தொடர்பிலும் கட்சி தொண்டர்களுடனும் முன்னை நாள் பிரதேச சபை உறுப்பினர்களுடனும் இன்று கலந்துரையாடலை ஆரம்பித்து மகிழ்ச்சிகரமாக முடிவு செய்துள்ளோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |