புதிதாக திறந்துவைக்கப்பட்ட குச்சவெளி காவல் நிலையம்! (படங்கள்)
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
By Shadhu Shanker
திருகோணமலை குச்சவெளி காவல் நிலையமானது புதிதாக நிர்மானிக்கப்பட்ட காவல் நிலையத்தொகுதியில் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பிரதி காவல் அதிபர் எம்.ஜீ. குணதி்லக குறித்த நிகழ்வின் விசேட அதிதியாக கலந்துகொண்டு காவல் நிலையத்தினை திறந்து வைத்தார்.
விசேட அம்சம்
1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த காவல் நிலையமானது இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் நடத்திவரப்பட்டிருந்ததை அடுத்து இன்றையதினம் காவல் திணைக்களத்திற்கு உரித்தானதோர் கட்டடத்தொகுதியில் திறந்துவைக்கப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.
குறித்த நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமன் சிகேரா, முப்படை தளபதிகள், அரச அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 14 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்