உரிமையாளர்கள் மீது பழி போடும் செயலாளரும்! மிரட்டி பணியவைக்க முயற்சிக்கும் தவிசாளரும்...

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Sonnalum Kuttram
By Theepan Apr 30, 2026 05:33 AM GMT
Report

"நாம் எமக்கிருந்த சந்தேகத்தையே யாழ். மாவட்ட செயலாளரிடம் கேட்டிருந்தோம். ஆனால் அவர் யாருடைய உந்துதலோ தெரியவில்லை எப்படியாவது காணிகளை நில அளவீடு செய்துவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டே எம்மிடம் திணிப்புக்களை மேற்கொண்டார்

நாம் அதற்கு இடம் கொடுக்காததனால் நில அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எம்மீது பழியை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றார் மாவட்ட செயலாளர்”

இந்த கருத்துக்கள் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைவிடக் காணி உரிமையாளர்களிடம் இருந்து வெளிவந்தவையாகும்.

தையிட்டி அளவீட்டு சர்ச்சை: அதிகாரிகளின் விளக்கங்களில் முரண்பாடுகள்

தையிட்டி அளவீட்டு சர்ச்சை: அதிகாரிகளின் விளக்கங்களில் முரண்பாடுகள்

தையிட்டி திஸ்ஸ விகாரை

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தையிட்டி திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில்

“ஏற்கனவே திகதி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த 28.04.2026 தையிட்டி காணி அளவிடும் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் அழைக்கப்படாத குழுவினரும், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நில அளவையியலாளர்களும் மட்டுமல்லாது தொல்பொருள் திபைக்கள அதிகாரிகள், திஸ்ஸ விகாரை மற்றும் வெடுக்குநாறி விகாரைகளின் பிக்குகள் என சந்தேகத்துக்கிடனான பலர் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணி அளவீட்டை எழுத்து மூலம் முறையான சட்டப் பிரகாரம் தருமாறு நாம் கோரினோம்.

ஆனால் முறையான கடிதத்தலைப்பற்ற ஒரு தாளில் பல்வேறு மயக்கங்களுடன் உறுதியான சட்ட ஏற்பாடற்ற கருத்துடன் ஒரு இணக்கப்பாட்டு சான்று எம்மிடம் மாவட்ட செயலாளரினால் காணிக்கப்பட்டது.

ஆனால் எமக்கு குறித்த அளவீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால் நாம் அந்த சான்றில் வலுவான சொற்பதங்களை இணைக்க வேண்டும் என்றும், கடிதத் தலைப்பில் அதை எழுதி குறித்த அதிகாரிகளது ஒப்பத்துடன் வழங்க வேண்டும் என கோரினோம்.

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட

ஏற்குமாறு வற்புறுத்தல்

இதற்கு மாவட்ட செயலர் ஒத்துழைக்கவில்லை. மாறாக வாய்வழியாக சொல்வது உத்தரவாதமாகும் என்றும் அதை ஏற்குமாறும் எம்மிடம் வற்புறுத்தினார்.

இந்த நிகையில் தான் இரு தரப்பினரிடையே இழுபறி ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி எம்மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கின்றார் மாவட்ட செயலாளர் பிரதீபன்.

எமக்காண காணி அளவீட்டில் என் உத்தரவாதம் தர அதிகாரிகள் பின்னடிக்கின்றனர் என எமக்கு சந்தேகம் இருக்கின்றது.

சிலவேளை நில அளவீடு முடிந்ததன் பின்னர் ஏதாவது அபகரிப்புக்கள் நிகளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா என்று எமக்கு ஐயம் எழுத்துள்ளது.

அதுமட்டுமல்லாது இந்த அதிகாரிகளுக்கும் அது தெரியும் என்பதால் பின்னாளில் தாம் தப்பித்துக் கொள்ளவும் சம நேரத்தில் காணிகளை அளக்க நாம் தான் விருப்புடன் ஒப்புதல் வழங்கியதாக பிரச்சினைகள் ஏற்பட்டால் காட்டுவதற்கு முற்பட்டுகின்றனரா என்றும் பலமான கேள்விகள் எம்மிடம் இருக்கின்றது.

துர்நாற்றம் வீசும் பெட்டிகள் - துருப்பிடித்த கழிவறைகள்: திருகோணமலை - கல் ஓயா தொடருந்து சேவையின் மோசமான நிலை

துர்நாற்றம் வீசும் பெட்டிகள் - துருப்பிடித்த கழிவறைகள்: திருகோணமலை - கல் ஓயா தொடருந்து சேவையின் மோசமான நிலை

மிரட்டி பணியவைக்கும் செயற்பாடு

இதேநேரம் வலி வடக்கின் தவிசாளரும் எம்மை மிரட்டி பணியவைக்கும் செயற்பாடுகளை செய்து வருகின்றார்.

அவர் யார், இந்த காணி விடையத்தில் அவருடைய பங்கு எத்தகையது என்பது எமக்கு தெரியும். ஆனாலும் பணம் கைமாறியதா என்ற சந்தேகம் இன்று எமக்கு எழுந்துள்ளது.

இதேநேரம் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் எம்மை எதுவும் தெரியாதவர்கள் என்று எண்ணுகின்றார் என நினைக்க தோன்றுகின்றது.

ஏனென்றால் நாம் வருடக் கணக்கில் கோருகின்றோம். இந்த கட்டடத்தை சட்டவிரோதம் என்று அடையாளப்படுத்தி ஒரு அறிக்கையை வெளிப்படுத்த கூறி.

ஆனால் அவர் எமக்கு ஒன்றையும் நடைமுறையில் ஒன்றையும் செய்து வருகின்றார்.

இவ்வாறானவர்கள் எமக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேவை இல்லை. அப்படியான பிரதேச சபையும் எமக்கு தேவை இல்லை” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்