இஸ்ரேலில் ஆபரேஷன் அஜய்: இந்திய அரசின் அடுத்தகட்ட முயற்சியும் வெற்றி
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் இஸ்ரேலில் சிக்கிய பல இந்தியர்கள் மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.
இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
அதன்படி, முதல்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை டெல்லி வந்தடைந்தனர்.
அடுத்தகட்ட முயற்சி வெற்றி
இந்நிலையில், ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 2வது மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜ்குமார் ராஜன்சிங் நேரில் சென்று வரவேற்றார்.
இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரித்தப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
