மின் தடையால் முடங்கியது கொழும்பு தேசிய வைத்தியசாலை
Ceylon Electricity Board
Power Cut Today
Colombo National Hospital
By Kathirpriya
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பல கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) காலை 10.00 மணிமுதல் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மின் தடையால் வைத்தியசாலையின் தொலைபேசி சேவை மற்றும் குளிரூட்டி அமைப்பு என்பன செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் மின்விளக்குகளின் உதவியுடன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மத்திய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்