யுக்திய நடவடிக்கை : 24 மணித்தியாலயத்தில் 673 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 663ஆண்களும் 10 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுள் 07 பேர் மேலதிக விசாரணைக்காக காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 02 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக் காவல்
இந்த சுற்றிவளைப்பில் மேல் மாகாணத்தில் (Western Province) 418 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களிடமிருந்து 90 கிராம் ஹெரோயின், 127 கிராம் ஐஸ் மற்றும் 236 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 52 கிராம் ஹெரோயின், 1843 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |