சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்ட வாய்ப்பு
தியகம சபாரி பூங்காவில் ``சினா' என பெயரிடப்பட்ட சிங்கத்தால் பிறந்த இரண்டு சிங்கக்குட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வையிடமுடியுமென ரிதியகம மிருகக்காட்சிசாலையின் காப்பாளர் உதவிப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.
உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு இந்த இரண்டு குட்டிகளும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று சமரசேகர தெரிவித்தார்.
9 குட்டிகளை ஈன்ற சினா

இந்த இரண்டு குட்டிகளையும் பெற்றெடுத்த "சினா" என்ற சிங்கம் மூன்று முறை 9 குட்டிகளை ஈன்றுள்ளது. இதன்படி ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்த சிங்கக்குட்டிகளின் மொத்த எண்ணிக்கை 18 ஆகும்.
இதற்கிடையில், "லாரா" என்ற பெண் சிங்கத்தால் பிறந்த "டோரா" என்ற முதல் சிங்கக் குட்டி பலரது அன்பை வென்றது.
பெயர் சூட்ட வாய்ப்பு

இரண்டு சிங்கக் குட்டிகளுக்கும் இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும், ரிதியகம சபாரி பூங்காவின் முகநூல் பக்கத்தின் ஊடாக சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்ட சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் ரிதியகம மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். எனவே சிறந்த பெயர்களை பரிந்துரைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்







