மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

Sri Lanka Police Mannar Parliament of Sri Lanka Sri Lankan Peoples
By Sathangani Feb 19, 2025 10:53 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மன்னார் (Mannar) - கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கனிய மணல் அகழ்விற்காக கள விஜயம் மேற்கொண்ட அதிகாரிகளை அப்பகுதி மக்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.

கடந்த இரண்டு தடவைகள் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்றைய தினம் (19) மூன்றாவது தடவையாகவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க கள விஜயத்தை மேற்கொண்ட போதும் இறுதியில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காத நிலையில் குறித்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மன்னாரில் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் : சபையில் பகிரங்கப்படுத்திய எம்.பி

மன்னாரில் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் : சபையில் பகிரங்கப்படுத்திய எம்.பி

நீதிமன்றத்தில் தடை உத்தரவு

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இன்று (19) காலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தனர்.

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள் | Oppositio N To Mineral Sand Mining In Mannar

இதன் போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் 23 திணைக்களங்களின் அதிகாரிகள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்கு கள விஜயத்தை மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டனர்.

மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கனிய மணல் பரிசோதனைக்கான கள விஜயத்தை மேற்கொண்ட நிலையில் மக்களும் தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

யாழ் நூலக எரிப்பு விவகாரம் : அநுரவை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி எம்.பி

யாழ் நூலக எரிப்பு விவகாரம் : அநுரவை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி எம்.பி

 கள விஜயம் உடனடியாக நிறுத்தம்

இதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மற்றும் இன்று குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தனர்.

மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கு எதிர்ப்பு : அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள் | Oppositio N To Mineral Sand Mining In Mannar

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இன்று முன்னெடுக்கப்பட இருந்த கணிய மணல் அகழ்வுக்கான கள விஜயம் உடனடியாக நிறுத்தப்பட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதன் போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், உள்ளடங்கலாக கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, சரசாலை, Toronto, Canada

01 May, 2015
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, La Courneuve, France

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024