ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம்: சஜித்
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கல்வித்துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பி உள்ளோம்.
சிறந்த தீர்வு
கேள்வி எழுப்புவதோடு மாத்திரம் மட்டுப்படாமல் கல்வி அமைச்சரோடு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு துறையினரை தொடர்பு படுத்தி கேள்வி எழுப்பியதோடு மாத்திரம் நின்று விடாமல் அதற்கான பதிலை பெற்றுக் கொள்வதற்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கல்வி நிர்வாகம், கல்வி அதிபர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை, ஆசிரியர் சேவை,ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கல்வி சாரா ஊழியர்கள், பிரிவேனாக் கல்வி, அறநெறி கல்வி, பல்கலைக்கழக கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து அக்கறை செலுத்துகின்றோம்.
இந்த அனைத்து துறைகள் குறித்தும் விரிவாகவும் சார்பாகவும் செயற்படுவதன் ஊடாக அந்தந்த துறைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் என்பனவற்றுக்கு வழங்கக்கூடிய சிறந்த தீர்வினை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வழங்குவோம்.
கல்வித் துறையில் மாற்றம்
எமது நாட்டின் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
எமது நாட்டின் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். கல்வித்துறையில் காத்திரமான மாற்றங்களை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். இலவசக் கல்வியின் ஊடாக அனைத்து பல்கலைக்கழகங்களையும் சகல வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |