அரசாங்கத்தை கவிழ்க்க போகும் எதிர்க்கட்சிகள்!
வாக்களித்த பெரும்பான்மை மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கெண்டு செல்கிறது. எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள், பெற்றோல், டீசல் போன்றவற்றுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர்.
வருகின்ற ஆட்சி என்பது சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியே இடம்பெறும். அதன் போது எமது மலையக மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை எம்மால் முன்னெடுத்து செல்ல முடியும்.
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்தால் மாத்திரமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். அதேபோல் இம் முறையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்வோம் என தெரிவித்துள்ளார்.
