கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை - சஜித் அறிவிப்பு
ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது சட்டபூர்வம் அற்ற பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் சமகி ஜன பலவேகய பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார்
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவரை பதவி விலகுமாறு கோரி ஆளும் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காலி முகத்திடலில் போராட்டம் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
