22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!

Sri Lankan Peoples 22nd Amendment NPP Government
By Dhilak Sep 01, 2026 01:30 AM GMT
Report

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்

கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்! | Opposition To 22Nd Constitutional Amendment Bill

அறிக்கையின் முக்கிய கருத்துகள்

  1. உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
  2. 2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து

இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்! | Opposition To 22Nd Constitutional Amendment Bill

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.

நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை

நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016