சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கிறது.
]ஓரளவு பலத்த காற்று
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |