மைத்திரிக்கு உள்வீட்டுக்குள்ளேயே வெடித்தது எதிர்ப்பு
மைத்திரிக்கு எதிர்ப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை கட்சியின் உள்ளக கலந்துரையாடலுக்கு அண்மையில் அழைத்தமை தொடர்பிலேயே இந்த எதிர்ப்பு வெடித்துள்ளது.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றதன் பின்னர் தம்மை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ள நிலையில், கட்சியில் உள்ளக கலந்துரையாடலுக்கு தம்மை மீண்டும் அழைப்பது ஏன் என முன்னாள் அரச தலைவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப தவறிய மைத்திரிபால சிறிசேன, தற்போது அதனை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
