உடன் செயற்படுத்துங்கள் -கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு
covid vaccine
gotabaya
order
By Sumithiran
கொவிட் தொற்றுக்கு எதிரான 2வது டோஸை (DOSE) செலுத்தி, மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும், நடமாடும் சேவை மூலம் தடுப்பூசியின் 3வது மருந்தளவான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ(gotabaya Rajapaksha), சுகாதார தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் தடுப்பூசி செயலணிக் கூட்டத்தில் இன்று கலந்துரையாடல்களை நடத்திய போதே, சுகாதார தரப்பிற்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


