கோட்டாபய பிறப்பித்த உத்தரவு! கொடுக்கப்பட்ட வாக்குறுதி
நாடு எதிர்நோக்கியுள்ள மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு அரச தலைவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்படி, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரி மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மின்துண்டிப்பு நேரமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ச்சியாக மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
