நீதிமன்றினுள் ரணிலை காணொளி எடுத்தவர்களுக்கு பேரிடி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முற்படுத்திய தினமன்று இரவு நீதிமன்ற அறையில் நடந்த சில நிகழ்வுகளை காணொளிகளாக பதிவேற்றியவர்களை கைது செய்ய கோட்டை நீதான உத்தரவிட்டுள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அவமதிப்புச் சட்ட விதிகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
காணொளி
ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அறிவித்த தருணத்தை, நீதிமன்ற அறையில் இருந்த ஒருவர் காணொளியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நீதிமன்ற அறையின் இருக்கையில் இருந்த சந்தேகநபரான ரணில் அமர்ந்திருப்பதை காணொளி எடுத்த ஒருவர், அதனை சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அதன்படி, இந்த வழக்கு குறித்து சொல்லாட்சிக் கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர்கள் மீதும், நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் சமர்பித்த உண்மைகளை கருத்தில் கொண்டு, நீதிமன்ற நிகழ்வுகளை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கொம்பனித்தெரு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் போத்தலொன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

