சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம்! பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Jul 29, 2025 05:09 AM GMT
Report

தொடருந்து காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு பௌத்த மதகுரு ஒருவருக்கு அத்தனகல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை அறவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி மஞ்சுள கருணாரத்னவினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு ஒரு துறவிக்கு உத்தரவிட்டார். 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

தொடருந்து காப்புப் பகுதி

மீரிகம விஜய ராஜதஹன பகுதியில் உள்ள தொடருந்து காப்புப் பகுதியில் வீடு கட்டியுள்ள கே. சிறிவிமல என்ற துறவிக்கு எதிராக தொடருந்து பாதுகாப்புப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம்! பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு | Order To Demolish Buddhist Priest S House

இதன்படி இந்த வழக்கு முன்பு அழைக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட துறவி இரண்டு மாதங்களுக்குள் கட்டுமானத்தை அகற்றுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (25) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான தொடருந்து பாதுகாப்புப் பிரிவின் துணை ஆய்வாளர் பிரியந்த நந்தனதிலக்க, வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள்

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள்

குற்றம் சாட்டப்பட்ட துறவி

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட துறவியின் சார்பில் முன்னிலையான சட்டத்திரணி, எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் கதின பூஜை விழா காரணமாக அவர் விலக முடியாது என்று கூறி கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தார்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம்! பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு | Order To Demolish Buddhist Priest S House

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், மத விடயங்களின் அடிப்படையில் சட்டத்தை மீற முடியாது என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை வசூலிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021