ரணிலின் ஆலோசனை - ஆளுநர்களுக்கு பறந்த உத்தரவு
மேலதிக பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம்
மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான மாகாண சபையின் செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான மேலதிக பொறுப்பு மாகாண ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இதுவரை மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாத சூழ் நிலையில் இந்தப்பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனை
தற்போதைய சவால் மிக்க காலப்பகுதிக்குள் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்து மக்கள் சேவைகளை சிறந்த முறையில் நடத்திச் செல்வது அவசியம் என்று கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி பணிகள் மற்றும் மாகாண சபை செலவுகளை முகாமைத்துவம் செய்யும் போது, தேசிய கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப மற்றும் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

