முக்கிய பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை
Ministry of Education
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Dilakshan
அடுத்த வருடம் முதல் சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும் , 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை
இதற்கமைய பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை கல்வித் தவணை அடங்கிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி