புடினின் அதிரடி நகர்வால் அச்சத்தில் மேற்குலகம்

Vladimir Putin Belarus Russia
By Sumithiran Aug 02, 2025 01:09 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தமது புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்ய(russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladimir putin) அறிவித்துள்ளமையைானது மேற்குலகை அச்சமடைய வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ரஷ்யா வந்துள்ள பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோவுடன் செயின்ட் பீட்டா்ஸ்பேர்க் நகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த புடின் இதுதொடர்பாக கூறியதாவது:

பெலாரஸில் நிலைநிறுத்தப்படவுள்ள ஆரெஷ்னிக் ஏவுகணைகள்

ஆரெஷ்னிக் ஏவுகணைகள் இராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த ஏவுகணைகளை பெலாரஸிலும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

புடினின் அதிரடி நகர்வால் அச்சத்தில் மேற்குலகம் | Oreshnik Missile In Belarus Putin

 அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா மீது வீச அந்த நாடுகள் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா கடந்த மாதம் வீசியது.

 கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு ஒலியைப் போல் 10 மடங்குக்கும் மேலான வேகத்தில் அது பாயும் என்றும் ஜனாதிபதி புடின் பின்னா் அறிவித்தாா்.

ரஷ்யா- மேலை நாடுகளுக்கு இடையிலான சமநிலையை மாற்றும்

மேலும், இடைமறித்து அழிக்க முடியாத அந்த ஏவுகணைகள் உக்ரைன் போரின் போக்கையும், ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான சமநிலையையும் மாற்றும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அந்த வகை ஏவுகணைகள் மிக சொற்பமாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்று மேற்கத்திய பாதுகாப்பு நிபுணா்கள் கூறியிருந்தனா்.

புடினின் அதிரடி நகர்வால் அச்சத்தில் மேற்குலகம் | Oreshnik Missile In Belarus Putin

இந்த நிலையில், ஆரெஷ்னிக் ஏவுகணை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, இராணுவப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக புடின் தற்போது அறிவித்துள்ளமை மேற்குலகை அச்சமடைய வைத்துள்ளது.

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் ட்ரோன் - தவறிய தாக்குதல் இலக்கு : வைரல் காணொளி

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனின் ட்ரோன் - தவறிய தாக்குதல் இலக்கு : வைரல் காணொளி

ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து! சர்ச்சையை கிளப்பும் சிம்ப்சன் காணொளி

ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து! சர்ச்சையை கிளப்பும் சிம்ப்சன் காணொளி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026