இன்டபோலின் சிவப்பு பட்டியலில் 216 இலங்கையர்...! நாடு கடத்த அரசு நடவடிக்கை
இலங்கையிர்கள் 216 பேருக்கு எதிராக இன்டபோல் சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் விரைவில் நாட்டுக்கு கொண்டு வரப்படுவார்கள் என ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு பிடிவிறாந்து
அவர் மேலும் கூறுகையில், 216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களில் அதிகளவானோர் டுபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர்.
சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
இவர்களைக் கொண்டு வருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

இந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம்.
அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        