இலங்கையில் இந்த வருடத்தில் 42 துப்பாக்கிச்சூடுகளில் 27 பேர் பலி
இலங்கையில் (Sri Lanka) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராறு
இந்த நிலையில் பதிவாகியுள்ள 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள உலக குழுக்களுக்கிடையிலான தகராற்றினால் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டின் முதல் 72 நாட்களில் (ஜனவரி 01-மார்ச் 12) 30 சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன் அவற்றில் 21பேர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |