ஈரான் அதிபருக்கு இன்று இலங்கையில் துக்கதினம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான்(iran) அதிபர் இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi)க்கு இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதன்படி இன்றையதினம்(21) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசியக் கொடி அரைக்கம்பத்தில்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணிலின் இரங்கல்
இதுவேளை ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |