காலி முகத்திடல் போராட்டம் குறித்து நாமல் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்
ஊடகங்களுக்கு நேற்று (09) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது. போராட்டத்தை விட அதனை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
போலி வாக்குறுதி
போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சொத்துக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.
இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.
நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடுபவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது“. என நாமல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |