இந்திய வரைபடத்தை மாற்றிய அமெரிக்கா...! சர்வதேச அளவில் வெடிக்கும் சர்ச்சை
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
குறித்த வரைபடத்தில் சீனாவின் (China) வசம் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக காட்டப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி
இந்தியா வரிக்குறைப்பு செய்ய இருக்கும் பொருட்கள் தொடர்பான பட்டியலுடன் நம் நாட்டின் வரைபடமும் அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வமாக, வெளியிடப்பட்டுள்ள இந்த விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரும், இந்தியப் பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வொஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர்.
அத்துடன், சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் வரைபடம்
இந்தநிலையிலேயே, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் வசம் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக, குறித்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய - அமெரிக்க வர்த்த ஒப்பந்தத்தை விளக்கும் கிராஃபிக்கல் ரெப்ரசன்டேஷன்களில் இந்தியாவின் வரைபடம் இந்தியா விரும்பும்படி அமைந்துள்ளது.
ஒருவேளை இந்த முறை அமெரிக்கா தெரிந்தே இந்த வரைபடத்தைப் பயன்படுத்தி இருக்குமேயானால், இது இந்திய நிலைப்பாட்டில் அமெரிக்கா ஒத்துப்போகிறது என்பதை தெளிவாக பாகிஸ்தான், சீனாவுக்கு உணர்த்தும் சமிக்ஞை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 18 மணி நேரம் முன்