லாப் எரிவாயு விலை அதிகரிப்பு... மக்கள் விசனம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விரும்பியவாறு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் விலைகளை அதிகரித்துக் கொள்வதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் (NMCRP) தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபை உறக்கத்தில் உள்ளதா என்று கேள்வியெழுப்பிய அவர், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் வெள்ளிக்கிழமை (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விற்பனை விலை
இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப் சிலிண்டரின் விலை 80 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விற்பனை விலை 4,330 ரூபாயாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,742 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் விரும்பிய வகையில் ஏனைய நாடுகளுக்கு தீர்வை வரியை அதிகரிப்பதை போன்று லாப் நிறுவனம் தனது விருப்பத்துக்கு அமைய சிலிண்டரின் விலையை அதிகரித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 21 மணி நேரம் முன்