ஆசிரியர் பரீட்சை வர்த்தமானியில் குளறுபடி....! வெடித்த சர்ச்சை
2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்
குறித்த அறிக்கையில், ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை நீடித்து, புதிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட வேண்டும். "
2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அது பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்" என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 21 மணி நேரம் முன்