காலாவதியான பால் மா விநியோக நிலையமொன்று சுற்றிவளைப்பு
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) புறக்கோட்டை உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் விசேட சோதனையை மேற்கொண்டனர்.
இதன்படி, புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வந்த காலாவதியான பால் மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவிக்கையில்,
வழக்குத் தாக்கல்
“விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 825 கிலோகிராம் காலாவதியான பால் மா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொத்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.
காலாவதியான பால் மா
அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு விற்பனையாளர்கள் இந்த காலாவதியான பால் மாவை எடுத்துச் செல்வது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |